Search This Blog

Tuesday, April 8, 2014

அழகு - அருணா

விண்ணுக்கு விண்மீன் அழகு
வண்ண என் கண்ணுக்கு -
- அவளின் வடிவம் அழகு!
பாசத்திற்குப் பரந்தாமன் அழகு
நேசத்திற்கு என்னவளின்
பார்வையழகு!
பரிவுக்குப் பேகன் அழகு
கரிய என் கனிவுக்கு
அவளின் கனிவாய் அழகு!
திமிருக்குத் தில்லை வள்ளியம்மை அழகு
நிமிர்ந்த நன்னடத்தைக்கு
குமரியவளே அழகு!
சினத்திற்கு சீவகன் அழகு
இனத்திற்கு என்
இனியவள் அழகு!
கடவுள் நெறிக்கு காரைக்காலம்மையார் அழகு
கடந்துபோகும் நாட்களுக்கு
அவளது கடமை அழகு!
நட்புக்கு கர்ணன் அழகு
மட்கா என் காதலுக்கு
அவளது வைரநெஞ்சம் அழகு!
பெற்றோருக்குச் சிரவணன் அழகு
உற்றோரான எங்களுக்கு
அவளின் உறுதுணை அழகு!
பக்திக்குப் பரவசம் அழகு
சக்திக்குச் சங்கரி
நீ அழகு!
காதலுக்கு மும்தாஜ் அழகு
மோதலுக்கு என்னவளின்
முரண்டு அழகு!
உண்மைக்கு அரிச்சந்திரன் அழகு
வண்மைக்கு அவளது
வசீகரம் அழகு!
கலகத்துக்கு நாரதர் அழகு
தல காதலுக்கு அவளது
தைரியம் அழகு!
பொய்யுரைக்குப் புலவர் அழகு
மெய்யுரைக்கு அவளது
மேனி அழகு!
சுறுசுறுப்புக்குச் சிலந்தி அழகு
விறுவிறுப்புக்கு அவளின்
வீரநடை அழகு!
கருமைக்குக் கார்முகில் வண்ணன் அழகு
கருணை கொண்ட உள்ளத்திற்கு
அவளே அழகு!
பானத்திற்குப் பழம் அழகு
மானத்திற்கு அவளது
மனதைரியம் அழகு!
கோயிலுக்குக் கோபுரம் அழகு
தாயினிற்கு அவளது
தயைபுரிதல் அழகு!
பண்பிற்குப் பாண்டவர்கள் அழகு
நண்பிற்கு அவளது
அரிய நட்பு அழகு!
இறுதிக்கு முற்றுப்புள்ளி அழகு
இறுதி மூச்சுவரை
என் அருணாவே!!!!!
          அழகு!  அழகு!!  அழகு!!!

1 comment:

Translate