Search This Blog

Tuesday, August 26, 2014

10ஆம் வகுப்பு CBSE மாணவச்செல்வங்களுக்கான உரை நூல் (எனது முதல் முயற்சி)


 தமிழ் அன்னைக்கு வணக்கம்!!
எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
 எண்ணுவம் என்பது இழுக்கு.
ஆம்! நான் எடுத்த இச்செயலை நினைத்த மாட்டில் முடித்து விட வேண்டும் என்ற திண்ணமும், ஆர்வமும் எனக்குள் துளிர் விடக் காரணம் மாணவச்செல்வங்கள் மேல் நான் கொண்டிருக்கும் அபரிதமான அன்பும் அக்கரையுமே. எத்தனையோ உரை நூல் மாணவ மணிகளை நோக்கி வலம் வந்தாலும் எமது CBSE மாணவச்செல்வங்களுக்கான உரை நூல் தேர்வின் அடிப்படையில் இல்லாதது எனக்குள் ஒரு பெருங்குறையாகவே இருந்தது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு எழுந்ததே இந்நூல். இது மாணவர்களின் அறிவுப்பசிக்கு விருந்தாக்கும் என்று நம்புகிறேன்.
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
என்பதற்கேற்ப முயன்றுள்ளேன். இம்முயற்சியை மாணவக்கண்மணிகளாகிய நீங்கள் முயன்று வெற்றியடைவது உங்கள் கையில்தான் உள்ளது.முழுமையான அலசல்களின்படி தேர்வை நோக்கியே இந்நூலை அமைத்துள்ளேன். படித்துப் பயன் பெறுக!.

                   
இந்நூல் உருவாவதற்கு முதல் காரணகர்த்தியாக இருந்தவர் மதிப்பிற்குரிய பத்மா பப்ளிகேஷன் திரு. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது முதல் நன்றி. அடுத்து, இவ்வாய்ப்பினை நல்கிய எம் பள்ளி முதல்வருக்கு நன்றி. மேலும் எனது பெற்றோரின் ஆசிர்வாதம், கணவரின் கனிவு, தம்பிமார்களின் தயவு, சகோதரிகளின் அரவணைப்பு, எனதருமைக் குழந்தைகளின் குதூகலப் புன்முறுவல், நட்பின் நேசம் இதனை மேலும் செய்யத்தூண்டியது. இது எனது முதல் முயற்சி. இதில் ஏதேனும் குறையிருப்பின் சுட்டிக் காட்ட முயலுங்கள். முயல்கிறேன் மீண்டும் எனது முதல்வனை வேண்டி குறைகளை நிறைவு செய்ய…………….

உங்கள் பேராதரவை எதிர்நோக்கும்………

       

No comments:

Post a Comment

Translate