Search This Blog

Tuesday, February 18, 2014

10th Farewell [2013-14]



Monday, February 17, 2014

பிரிவு மடல்

எனது முதல் வடிவம் !!
அதுவும் முத்தான வடிவம் !!
முயற்சியை வெற்றியாக்கிய
வெற்றித் திலகம் - மேலும்
எனக்குப் பெருமை தேடித் தந்த
தரணியின் மாணிக்கங்கள் …..
எந்த ஒரு தாய்க்கும்
எத்தனை செல்வங்கள் இருந்தாலும்
முதல் செல்வத்தின் மேல் என்றும்
கரிசணை அதிகமாகத்தான் இருக்கும்
அதைப்போல் தான் எனக்கும்….. எத்தனை வகையான
மாணவர்களைப் பார்த்தாலும் - இம்மாணவர்களிடம்
ஏனோ என்னையறியாத தாகம், நேசம்……
தனயனாய், தோழனாய், நல் –
மாணாக்கராய் என்றும் என்னுடன் இருந்து
என்னை வழிநடத்தியவர்கள், வழிகாட்டியவர்கள்…….
இன்று, வழிகாட்டியவர்களுக்கு வழியனுப்பு விழா !
விம்முகிறது நெஞ்சம் , இருந்தும் விழைகிறது
விடைகொடுக்க….. ஆம்
விண் என்ற சொல்லை
எட்டுவதற்கும், முழு நிலா தோன்றும்
நாளைக் காண்பதற்கும் முனைப்புடன் இருக்கிறேன்
எனது முதல்வர்கள் என்றும்
எனதருமை முதல்வர்களே என்பதை மீண்டும்
நிரூபித்துக் காட்ட - இன்று
பற்றிய கரத்தை விடுகிறேன் - மீண்டும்

இணைந்து கரகோஷம் எழுப்ப J


Monday, February 3, 2014

தன்னம்பிக்கை



முயற்சி ! பயிற்சி !! வெற்றி !!! என்று ……





முயற்சி ! பயிற்சி !! வெற்றி !!!
ணல் பரப்பும் மதிய வேளையில் – அழகிய
ணம் வீசும் மல்லிகைச் சரங்களாய் – மாணவர்கள்
மாதவம் செய்திட வேண்டுமடா – என்ற துணிவுடன்
மாமன்னன் அசோகச் சக்ரவர்த்திபோல் – களத்தில் முனைய
மிதமான புன்முறுவலுடன்  - மாணவ மணிகள்
மீத்திறன் பெற்ற புத்துணர்வையும் புதுக்களிப்பையும் தந்து
முதல் என்றுரைத்து மிரட்சி கொள்ளச் செய்தனர் அனைவரையும்…
முதல் என்ற முத்து இரத்தினத்தைக் கேட்டதும்
மூழ்கி முத்தெடுத்த பிரமிப்பு என்னுள் கொண்டேன்..
மெல்ல மெல்ல இது கனவா ?? நனவா ??! – என்ற
மேலைநாட்டினரின் மேம்போக்குத்தனம்போல் என் வினா…. ஆம் !
மை ( மெய் ) உண்மைதான் என்றுரைக்க
மொகலாய சாம்ராஜ்யம் மீண்டும் புத்துணர்வு பெற்றதுபோல்
மோப்பக்குழைந்து அக மகிழ…
மௌவலான என் மாணவச் செல்வங்களின்
கரம் பற்றினேன் … கரகோஷம் எழுப்பினேன் …..
முயற்சி ! பயிற்சி !! வெற்றி !!!  என்று ……

Translate